சென்னை:

மிழக தமிழக அரசியல் நிலவரம் குறித்து நாளைக்குள்  முடிவு எடுக்காவிட்டால் ஆளுநர் மீது வழக்குத் தொடரப்போவதாக சுப்ரமணியன்சாமி எச்சரித்துள்ளார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுப்ரமணியன்சாமி சசிகலாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். நேற்று மாலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சுப்ரமணியன் சாமி இன்று தனது ட்விட்டரில்,  தமிழக அரசியல் நிலவரம் குறித்து நாளைக்குள் முடிவுகாண வேண்டும். இல்லையென்றால் தாமதம் காட்டுவது குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும் என்ற புகாரின் பேரில் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 32 ன் படி ஆளுனர் மீது வழக்குப் போட போவதாக சுப்ரமணியன்சாமி கூறியுள்ளார்.