சென்னை

ண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 12 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசு அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி நீண்ட நாட்களாகச் சிறையில் இருக்கும் சிறை கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. இதன்படி 12 ஆயுள் தண்டனை சிறை கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்கூட்டியே விடுதலையாகும் கைதிகள் விபரம் வருமாறு:-

கடலூர் சிறையில் இருக்கும் செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் என் கிற உக்கிரவேல் ஆகியோர் விடுதலை பட்டியலில் உள்ளனர்.

கோவை சிறையில் அபுதாஹீர் என்கிற அபு, விஸ்வநாதன் என்கிற விஜயன், கமல் என்கிற பூரி கமல், ஹரூண் பாட்சா என்கிற ஹரூண், சாகுல் அமீது, பாபு என்கிற ஊமையில் பாபு ஆகியோர் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இவர்களைத் தவிர வேலூர் மத்தியச் சிறையில் இருக்கும் ஸ்ரீனிவாசன், சென்னை புழல் மத்தியச் சிறையில் இருக்கும் ஜாஹீர் என்கிற குண்டு ஜாஹீர் ஆகிவரும் விடுதலையாகிறார்கள்.

நேற்று இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.