டெல்லி:

ஏர்இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு  முடிவு செய்து உள்ளது.  ஏலம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பாணை  வெளியிடப்பட்டு உள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர்இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்தியஅரசு முடிவு செய்தது. ஆனால், எந்தவொரு நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க முன்வராத நிலையில், அதை ஏலத்தில் விட்டு விற்பனை செய்ய அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவை  நிறுவனம் நாள் ஒன்றுக்கு 26 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2018-19ம் நிதியாண்டில் 7ஆயிரத்து 600 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து உள்ளதால் அதன் 95 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. தற்போது 100சதவிகிதத்தையும் விற்பனை செய்து,  60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில்,  ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகள் மற்றும் அதன் இணைப்பு நிறுவனமான அஸிசட்ஸ் (AISATS)  நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்க டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு விமான நிலையங்களில் தரை கையாளுதல் மற்றும் சரக்கு கையாளுதல் சேவைகளை வழங்கும் ஐசாட்ஸ் என்ற கூட்டு நிறுவனத்தில், துணை நிறுவனமான ஏர் இந்தியா சாட்ஸ்க்கு 50% பங்கு உள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் , அதன் கூட்டு நிறுவனமான ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் அதன் முழு பங்குகளையும் விற்க அரசாங்கம் முதற்கட்ட ஏலங்களை அழைத்தது.

முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை வெளியிட்ட முதற்கட்ட தகவல் குறிப்பின்படி, ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 17, மற்றும் தகுதியான ஏலதாரர்களுக்கு மார்ச் 31 அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

“ஏர் இந்தியாவின் மூலோபாய முதலீட்டுக்கு இந்திய அரசு (GOI) ஒப்புதல் அளித்துள்ளது.