டெல்லி: மத்தியஅரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் செய்தி சேனலான ( DD News cahnnel)  டிடி  நியூஸ் சேனலின் லோகோ நிறத்தை சிவப்பில் இருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றி உள்ளது மத்தியஅரசு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதனை எதிர்க்கட்சிகள் க  கண்டனம் தெரிவித்துள்ளன.

அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான டிடி நியூஸின் லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றியுள்ளது, இது ஆளும் பாரதியுடனான சானலின் ‘காவிமயமாதல்’ குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக வல்லுநர்களின் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

இதுதொடர்பாக   பிரசார் பாரதி, சி.இ.ஓ கவுரவ் திவேதி பேசுகையில், ‘‘ இந்த ஆரஞ்சு நிறம்  6-7 மாதங்களுக்கு முன்னர் , அதாவது,  ஜி20 மாநாட்டுக்கு முன்னரே  மாற்றப்பட்டது. ஒரு குழுமத்தில் உள்ள இரண்டு செய்தி சேனல்கள் தற்போது ஒரே வண்ணத்தில் கண்ணுக்கு அழகாக தோன்றும்.”, என்றார். மேலும்,  பொழுதுபோக்கு மற்றும் செய்தி நிகழ்ச்சிகளை  ஆங்கிலம், இந்தியில் ஒளிபரப்பும் டிடி நேசனல் சேனல், கடந்த ஆண்டு காவி மற்றும் நீல நிறத்துக்கு மாற்றப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார். லோகோ நிறம் மட்டுமல்லாமல் உபகரணங்கள் மற்றும் ஸ்டுடியோவையும் மாற்றி அமைத்துள்ளதாகவும், இது போன்ற அழகுணர்வுடன் மாற்றங்கள் செய்வது அவசிமாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

காவி நிறம் பாஜகவோடு சேர்த்து பேசப்படுவதைப் பற்றி நாங்கள் எந்த இடத்திலும் கருத்தில் கொள்ளவில்லை என்றும் ஆரஞ்சு, மஞ்சள் மற்றம் கருப்பு நிறங்களை எளிதில் நினைவு கொள்ள முடியும் என்ற அறிவியல் அடிப்படையில் மட்டுமே மாற்றம் கொண்டு வரப்பட்டதாக திவேதி தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும்  தூர்தர்ஷனின் லோகா பலமுறை மாற்றப்பட்டு வந்துள்ளன. ஆட்சியாளர்களுக்கு தகுந்தவாறு அந்த லோகாவின் வண்ணங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பாஜகவின் நிறமான ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்த மாற்றத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரசார் பாரதியின் முன்னாள் சிஇஓவான ஜவஹர் சிர்கார், தற்போது திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவர் இந்த மாற்றத்தை காவிமயமாக்கல் என்றும் ‘பிரசார் பாரதி‘ நிறுவனம் ‘பிரச்சார் பாரதியாக’ மாறி விட்டது என சாடி உள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மாநிலங்களவை மெரூன், சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதாகக் கூறினார். மக்களவை, மாநிலங்களவையின் பணியாளர்கள் அணியும் உடையின் நிறமும் காவியாக மற்றப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஜி20 மாநாட்டு லோகோவிலும் காவி நிறம் அதிகம் இடம்பெற்றது என்று கூறினார். இது கட்சியின் அடையாளத்தையும் நாட்டின் அடையாளத்தையும் ஒன்றாக சேர்ப்பதற்கான முயற்சி என்று சிர்கார் கண்டனம் தெரிவித்தார்.

தூர்தர்ஷனுக்காக 1976ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதன் முறையாக பச்சை நிற பினபுலத்தில் ஆரஞ்சு நிற லோகோ இருப்பதை பிரதமர் இந்திரா காந்தி தேர்ந்தெடுத்தார்.  இது தேசிய கொடியின் நிறத்தை பின்பற்றி அமைக்கப்பட்டது.