சென்னை:
தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள இறைச்சிக் கடைகள் மட்டும் மூடியிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மகாவீர் நிர்வனா என்ற ஜெயின் மத பண்டிகையை ஒட்டி நவம்பர் 4ம் தேதி இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் சுற்றறிக்கை சர்ச்சையான நிலையில், அது திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel