சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு தமிழ்நாடு அரசு  சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி,  2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று  கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்ப்படுகிறது. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.  இந்த கட்டுமான பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கான  மொத்த நிதி தேவையான ரூ.1977.8 கோடியில் 82 சதவீத தொகையான ரூ.1,627.70 கோடி ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2023 ஆகஸ்ட் 17-ந்தேதி மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டு கட்டுமான பணிகள் தொடங்கியன.

இதையடுத்து,  கட்டுமான பணிகளுக்காக, தமிழ்நாடு  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு 2024 பிப்., 27ல் கட்டட அனுமதி கோரி விண்ணப்பம் அனுப்பப்பட்டது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் மே 2 ல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. இதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அந்த நிபுணர் குழு கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த நிலையில்,  மே 10ல் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்திருந்தது.

இநத் நிலையில்,  மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதலை தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது.  இதையடுத்து விரைவில் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எய்ம்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.