அரசு நிலம் ஆக்கிரமிப்பு: ஷாருக்கானின் பண்ணை வீடு இடிப்பு!

Must read

மும்பை,
ரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஷாருக்கானின் பண்ணை வீடு இடிக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கையை ராய்கோட் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
ஷாருக்கானின் பண்ணை வீடு இடிப்பு: ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுக்கு  மும்பை பாந்திரா, பேண்ட் ஸ்டாண்டு பகுதியில் உள்ள மன்னத் என்ற அழைக்கப்படும் பங்களா வீடு உள்ளது. அங்கு அவர் குடியிருந்து வருகிறார்.
மேலும் விடுமுறை நாட்களில் ஜாலியாக பொழுதை கழிக்கும் வகையில், ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் கடற்கரை அருகே பண்ணை வீடு ஒன்றும் உள்ளது.

சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவருடன்  அமைந்து உள்ளது பண்ணை வீடு. அந்த பகுதியில்  பல்வேறு தொழில் அதிபர்களுக்கு சொந்தமான பங்களா வீடுகளும் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பங்களாக்கள் கட்டியுள்ளதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நிலங்களை அளந்து ஆய்வு மேற்கொண்டது.
இதில், சுமார் 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தெரிய வந்தது. அந்த ஆக்கிரமிக்கப்பட்ட இரண்டு ஏக்கரில் 1 ஏக்கர் நிலம் ஷாருக்கான் பண்ணை வீடு அமைந்துள்ள பகுதியாகும்.
இதையடுத்து ஷாருக்கானின் பண்ணை வீட்டை பொக்லைன் எந்திரம் கொண்டு ராய்காட் மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது. இந்த நிகழ்ச்சி அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article