நாகை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் மேர்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ளது அரசு மருத்துவமனை. இங்கு மகப்பேறு பிரிவும் செயல்பட்டு வருகிறது. இது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சம்பவம் நடநத்தபோது அந்த வளாகத்திற்குள் குழந்தைகள் மற்றும் பெண்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏற்கனவெ கடந்த மாதம் கோவை மாவட்டம் சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். அதுபோல கடந்த 20-ம் தேதி பொறையாறு பஸ் பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்துவிழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அரசு கட்டிடங்கள் இதுபோல இடிந்துவிழுவதால், கட்டிடத்தின் உறுதி தன்மைமீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.