கொல்கத்தா:

விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரது பிறந்த நாட்களை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் இந்தியாவிலும், உலகளவிலும் பிரபலமானவர்கள். இருவரது பிறந்த நாட்களையும் தேசிய விடுமுறை நாட்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

விவேகானந்தரின் பிறந்த நாள் ஜனவரி 12ம் தேதியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் ஜனவரி 23ம் தேதியும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.