இது குறித்து தமிழக அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோ மீட்டர் என உள்ளது . இதனை இனி வரும் காலங்களில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விரைவுப் பேருந்துகள் அல்லாத பிற அரசு பேருந்துகளின் ஆயுட் காலம் தற்போது ஏழு லட்சம் கிலோ மீட்டர் அல்லது ஆறு ஆண்டு காலம் என உள்ளதை, இனி வரும் காலங்களில் ஒன்பது ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என நீட்டித்துள்ளது.
நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், புதிய சாலை வசதிகள், நவீன வடிவமைப்பு காரணமாக ஆயுட் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.