சென்னை: தமிழகஅரசு ஊழியர்களுக்கு ‘பொங்கல் ஜாக்பாட்டாக அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. 31 சதவிகிதமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே 17% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை 31 சதவிகிதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.