சென்னை: தமிழ்நாட்டில்   118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை  653 பேருக்கு ஒமிக்ரான தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. அவர்களில்  186 பேர் குணமடைந்துள்ளதாகவும்,  467 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும 118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக கூறியவர், மேலும், 118 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னரே எத்தனை பேர் ஒமிக்ரான்    தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வரும் என்றார்.

தற்போதைய நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, அதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அதுமட்டுமல்லாமல் , நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் கண்காணிக்கப்படும் என்றவர், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக அறிவிப்புகள் வராமல் இருப்பது மகிழ்ச்சி.அதே சமயம் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் இரவு நேர ஊரடங்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு  பதில் அளித்தவர், அதுகுறித்து,  டிசம்பர் 31 ஆம் தேதி முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு தெரிய வரும் என்றார்.