சென்னை: நாடு முழுவதும் 2நாள் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு போக்குவரத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளதால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கம் முடங்கி உள்ளது.

சென்னையில் பேருங்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், கிடைக்கும் ஷேர் ஆட்டோக்கள் மூலம் ரயில் நிலையங்களுக்கு சென்று, ரயில்கள் மூலம் கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். இதனால்  மின்சாரம் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் “தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத் கொள்கைகளுக்கு” எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று காலை 6 மணி முதல் 30-ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வேலைநிறுத்ததில் தமிழக அரசு போக்குவரத்துதுறை, வங்கிகள் உள்பட பல்வேறு பொதுத்துறை ஊழியர்களும் பங்குகொண்டுள்ளனர். இதனால் அரசு பேருந்துகள் இயக்கப்படுவது தடைபட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் அரசு பேருந்துகளை நம்பி இருந்த நிலையில், அரசு பேருந்து இயக்கப்படாதது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது.

இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர், வியாபாரிகள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிற்சங்க போராட்டம்  காரணமாக ஈடுபட்டாலும் அலுவலகங்கள், நிறுவனங்கள் செயல்பட்டதால் கட்டாயம் பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் திண்டாடினார்கள் அவர்கள், தாங்கள் செல்ல இடங்களுக்கு ரெயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர்.

இதனால் ரயில் நிலையங்களிலும், ரயில்களிம் கூட்டம் அலைமோதுகிறது. தாம்பரம்-கடற்கரை, சென்ட்ரல்-அரக்கோணம் வழத்தடத்தில் பல ரெயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பலர் திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்துதான் அவர்களால் டிக்கெட் வாங்க முடிந்தது. சென்ட்ரல்-பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் இன்று வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது. மேலும, மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.