சென்னை:

5ம் தேதி நடக்கும் முழு வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு பஸ் தொழிலாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 5-ம் தேதி முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முழு அடைப்பில் தொ.மு.ச, சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 15 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இச்சங்கங்களின் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.