அமெரிக்காவில் கிரீன்கார்டு கேட்டு இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய விண்ணப்பம்…

Must read

கொழும்பு: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் வகையில், தற்போது   இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக கோத்தபய குடும்பத்தினர், மக்களின் போராட்டம் காரணமாக, அரசு பதவிகளை இழந்து, வீட்டுக்குள்ளேயே மறைந்து வாழ்ந்து வருகின்றனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய நிலையில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் மக்கள் போராட்டம் காரணமாக ஜூலை 13ல் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவு, சிங்கப்பூர் என ஓடி ஒளிந்த நிலையில், தற்போது தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். தாய்லாந்து சென்ற அவர் பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்தும் அவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கோத்தபய மீண்டும், வரும் 24ம் தேதி அவர் இலங்கை திரும்புவார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்த சூழலில், தனக்கும், தனது மனைவிக்கும் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டி கிரீன் கார்டு அளிக்க வேண்டும், அமெரிக்க அரிசிடம் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த மாதமே தனது வழக்கறிஞர் மூலம் இதற்கான ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

More articles

Latest article