ஈரோடு:
கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று ஸ்வர்ண பந்தனம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் எட்டாம் கால வேள்விகள் நிறைவு பெற்று திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தின் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். “பச்சைமலை பவளமலை எங்கள் மலை நாடு” என்ற வாசகத்திற்கேற்ப இவ்விருமலை முருகன் கோவில்களும் இப்பகுதி மக்களால் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி அளிக்கிறார்.

இந்நிலையில், கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.