டில்லி:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் கட்டப்பட்டுள்ள 57ஆயிரம் பொது கழிவறைகள் எங்குள்ளது என்பதை சமூக வலைதளமான கூகுள் தனது மேப் மூலம் துல்லியமாக அடையாளம் காட்டி உள்ளது.

பாஜக ஆட்சி முதன்முறையாக பதவி ஏற்றதும், கடந்தத 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா (ஸ்வாச் பாரத்) திட்டத்தின்படி, நாடு முழுவதும் 11 கோடி கழிவறைகள் ரூ.1.96 லட்சம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது.

தறபோது மகாத்மாவின் 150 பிறந்தநாளையொட்டி, கூகுள் மேப்  முதல் கட்டமாக நாடு முழுவதும்  2,300 நகரங்களில் உள்ள சுமார்  57 ஆயிரம் பொதுக்கழிவறைகள் குறித்த  தகவல்களை வெளியிட்டு உள்ளது.

சமீப காலமாக  ‘கூகுள் சர்ச்’ மற்றும் ‘கூகுள் மேப்’பில், பொதுக்கழிவறை குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை  2.50 லட்சத்துக்கு அதிக கூடிய நிலையில், நாடு முழுவதும் உள்ள பொதுக் கழிவறை இடங்களைச் சேர்த்து வருகிறது கூகுள்.

தற்போது 2 ஆயிரத்து 300 நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்காக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 57 ஆயிரம் கழிவறைகளுக்கான இடங்களையும் கூகுள் மேப்பில் தரப்பட்டுள்ளது

இதுகுறித்து கூகுள் மேப்பின் மூத்த மேலாளர் கூறும்போது, ” பொதுக்கழிவறை எங்கிருக்கிறது என்ற தகவலை நாங்கள் வழங்குவது மக்களுக்கு மிகவும் துணை புரியும். ஸ்வச் பாரத் திட்டத்தின் நோக்கத்தை அடைய வழிவகுக்கும். இதன் மூலம் மக்களின் கழிவறை பயன்பாடு அதிகரித்து, சுத்தமான, சுகாதாரமான சூழலில் வாழ்வார்கள்.

கூகுள் சர்ச்சில் சென்று ‘பப்ளிக் டாய்லட் நியர் மி’ (Public toilets near me)  என்று தேடினால், அருகில் உள்ள கழிவறை விவரங்கள் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

ஸ்வாச் பாரத்  திட்டத்தின் மூலம் இதுவரை நாட்டில். 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியுடன் பொதுக் கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியா மாறுகிறது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.