கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சபரி – சரவணன் இணைந்து இயக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் 2019-ல் வெளியான திரைப்படம் ஆன்ட்ராயிடு குஞ்சப்பன் வெர்சன் 5.25. சௌபின் ஷகிர், சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவாள் இயக்கிய இந்தப் படத்தின் தழுவலே கூகுள் குட்டப்பனாக தமிழில் தயாராகியுள்ளது.

இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.

மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இந்நிலையில்‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.