கேரள பிரபல எழுத்தாளருக்கு டூடுல் வெளியிட்டு கூகுள் கவுரவம்

Must read

லக பிரசித்தி பெற்றவர்களை கூகுள் நிறுவனம் தனது இணையதள டூடுலாக பதிவிட்டு கவுரவித்து வருகிறது.

சமீபத்தில் இந்திய சுந்திர தினத்தை கவுரவித்த கூகுள், தற்போது கேரளாவை சேர்ந்த எழுத்தாளரான கமலாதாசை கவுரவிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு உள்ளது.

கேரளாவை பூர்விகமாக கொண்ட கமலாதாஸ், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பல்வேறு கட்டுரைகள், கவிதைகள் எழுதி உள்ளார்.

பெண்களின் பிரச்சினைகள் குறித்து பல கட்டுரைகள் எழுதியுள்ள கமலாதாசின்  கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் பாலியல் இருந்து பிரசவம் வரைபெண்களின் பிரச்சினைகளைச் சுற்றியுள்ளன.

விமர்சகர்கள் அவரை ஒரு பெண்ணிய எழுத்தாளர் மற்றும் “நவீன ஆங்கில இந்திய கவிதைகளின் தாய்” என்று அழைத்தனர்.

கமலாதாஸ் தனது வாழ்க்கை குறித்து, ஆங்கிலத்தில் ‘மை ஸ்டோரி’ எழுதி, பின்னர் ‘என் கதா’ மலையாளத்தில் எழுதினார்.

அவர் எழுதியுள்ள , ‘மை ஸ்டோரி’யில் , ஒரு பொறுப்பற்ற திருமணம், பாலியல் வருமானம், தற்கொலை எண்ணங்கள் மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றி  எழுதியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவர் தனது 65வயது வயதில் இஸ்லாமுக்கு மாறி, தனது பெயரை கமலா சுரேயவு என மாற்றியது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article