சென்னை:

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ராஜ்பவனில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முனுசாமி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

சந்திப்பிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். அங்கு பன்னீர்செல்வம் கூறியதாவது:

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாங்கள் கவர்னரை சந்தித்தோம். தமிழகத்தில் நடக்கும் அனைத்து விபரங்களையும் பேசிவிட்டு வந்துள்ளோம். உறுதியாக நல்லது நடக்கும். ‘‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’’

.இவ்வாறு அவர் கூறினார்.

பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சை கேட்டு அங்கு குழுமியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும், செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால், அவர் பதில் கூறாமல் வீட்டினுள்ளே சென்றுவிட்டார்.

[youtube-feed feed=1]