இங்கே ஆளுநர் சந்திப்பு: அங்கே பிரதமரை “பார்த்தார்” தம்பிதுரை

Must read

தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்த தமிழக ஆளுநர் வித்யாசாகரின்  சென்னை பயயணம் இன்று நடந்தது. தற்போது கவர்னர் மாளிகையில் இருக்கும் அவரை தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். சந்திக்கிறார்.

இந்த நிலையில் டில்லியில் பிரதமரை, அதிமுகவைச் சேர்ந்தவரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார் என்று ஒரு தகவல் பரவியது. இதனால் பரபரப்பு கூடியது.

இதுகுறித்து டில்லி வட்டாரத்தில் விசாரித்தபோது,  “கூட்டத்தொடர் நிறைவடையும் நேரத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட்டவர்கள் பிரதமரை சந்திப்பது வழக்கம். மற்றபடி, பிரதமருடன் எந்தவித அரசியல் விவாதமும் நடத்தவில்லை”  என்று தகவல்கள் கிடைத்தன.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article