மூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் குட் மார்னிங் என்ற வார்த்தையே அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

ஏற்கனவே சமீபத்தில்,  2018 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கியதையொட்டி,  புத்தாண்டு வாழ்த்துகளை வாட்ஸ்அப்பில் உலகம் முழுவதும்  7500 கோடி பேர்  பகிர்ந்து கொண்டதாகவும்,  20 மில்லியன்  இந்தியர்கள் வாட்ஸ்அப் மூலம் வாழ்த்து செய்திகளை அனுப்பி சாதனை படைத்துள்ளதாக  வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது ‘குட் மார்னிங்’ என்ற வார்த்தையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா அதி வேகமாக முன்னேறி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களையே உபயோகப்படுத்தி வருகின்றனர். அதற்கு தகுந்தாற்போல், இணைய சேவையும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் காரணமாக சமூக வலைதளங்களை உபயோகப்படுத்து வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக பலரது செல்போன்கள் அடிக்கடி ‘ஸ்டக்’ ஆவதாகவும், மொபைல் போனில் இடமில்லை என்று கூறுவதாகவும் ஏராளமான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதில் பல வியப்புக்குரிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி,  இந்தியாவில்  பெரும்பாலானோர்,  தினமும் காலையில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்றவற்றை திறந்து, அதில், குட்மார்னிங் என்று காலை வணக்கத்தை அனுப்புவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில், குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதன்மூலமும் ஏராளமான தகவல்கள் பரிமாறப்படுகின்றன. குறைந்தது ஒரு குழுவில் இருந்து 50 வாழ்த்து செய்தியாவது பகிரப்படுகிறது என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கூகுளில் தேடுவோர்கள் எண்ணிக்கை  கடந்த  5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.