சென்னை: அனைத்து வகையான இணைய வழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

குதிரைப் பந்தயங்கள் மற்றும் இணைய வழி ரம்மி  உள்பட  காசினோக்களுக்கு  ஆன்லைன் கேமிங்கிற்கு வரி விதிக்க GoM ஒப்புக்கொள்கிறது. அதன்படி  28% ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்துள்ளதாக  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மத்திய நிதியமைச்சர்  தலைமையிலான ஃபெடரல் ஜிஎஸ்டி கவுன்சில் முறைப்படி ஒப்புதல் அளித்தவுடன், இந்தியாவில் ஆன்லைன் கேமிங்கிற்கான ஜிஎஸ்டியை பந்தயம் அல்லது சூதாட்டத்திற்கு இணையாக கொண்டு வருவது அமலாகும் என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

 அனைத்து வகையான ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒரேவிதமாக 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளதாவும், அதன்படி ஏற்கனவே குதிரை பந்தயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகித ஜிஎஸ்டி வரி 28சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்றும், இதற்கு மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு பரிந்துரைக்கும் என தெரிவிக் கப்பட்டு உள்ளது.

28 சதவீத வரி விதிப்பில் ஒருமித்த கருத்து உள்ளது, ஆனால் பொறிமுறை மதிப்பீட்டில் இன்னும் ஒருமித்த கருத்து இல்லை என்று வட்டாரங்கள்  அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. எனினும், சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கருத்துக்கள் இருக்கும். அரசாங்கம் பெரும்பான்மையுடன் முன்னோக்கிச் சென்றால்; பின்னர் மொத்த முகமதிப்பு அல்லது பந்தயத் தொகையின் மீது வரி விதிக்கப்படும். மேலும், சூதாட்ட விடுதிகளைப் பொறுத்தவரை, நுழைவுப் புள்ளியில் செலுத்தப்படும் தொகையின் மீது வரி விதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.