இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ ஐரோப்பிய நாடுகளில் ஊழியர் சங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

2019 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் சங்கம் தொடங்க அனுமதி கோரியிருந்தனர்.

இதற்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து 13 நாடுகளின் ஊழியர்களை உள்ளடக்கிய ஐரோப்பிய தொழிலாளர் கவுன்சில் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் சுமார் 30,000 ஊழியர்கள் உள்ள நிலையில் இந்த தொழிலாளர் சங்கம் மூலம் தங்கள் பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஊழியர் சங்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ள முதல் இந்திய ஐ.டி. நிறுவனம் விப்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.