சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த ஒரு மாதம் முன்பு ஒரு கிராம் சுமார் ரூ. 7300 என்று இருந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ. 7980க்கு விற்பனையாகிறது.

ஒரு மாதத்தில் 8% அதிகரித்த தங்கம் விலை இரு நாட்களுக்கு முன் (11-2-2025) ரூ. 8060 என புதிய உச்சத்தை எட்டிப்பார்த்த பின் நேற்று ரூ. 7940 என கீழே இறங்கியது.

இதையடுத்து தங்கம் விலை மேலும் இறங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அது மீண்டும் 40 ரூபாய் உயர்ந்து ரூ. 7980 ஆக உள்ளது.

சவரன் ஒன்றுக்கு ரூ. 320 உயர்ந்து ஒரு சவரன் 63,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 107க்கு விற்பனை செய்யப்படுகிறது.