தங்கம் விலை இன்று (25-2-2025) சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 64,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து ரூ. 8075க்கு விற்கப்படுகிறது.

Indian Traditional Gold Necklace shot in studio light.

ஒரு கிராம் தங்கம் ரூ. 8000த்தை கடந்து ஒரு வாரம் ஆன நிலையில் இன்று அதிகபட்சமாக ரூ. 8075ஐ எட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி 20ம் தேதி ரூ. 8070க்கு விற்கப்பட்ட நிலையில் கிராமுக்கு 20 ~ 30 ரூபாய் ஏற்ற இறக்கம் கண்ட நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 108 க்கு விற்பனை செய்யப்படுகிறது.