தங்கம் விலை 24ஆயிரத்தை எட்டுகிறது…!

Must read

சென்னை :
காலையில் உயர்ந்திருந்த தங்கம் விலை, மாலையில் சற்று குறைந்து காணப்பட்டது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2988 க்கும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,960 க்கும் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,904 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.50.50 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.47,210 ஆகவும் உள்ளது.
1gold
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது.  வங்கிகளில்  வட்டி விகிதம் குறைவாக இருப்பதாலும், அதற்கான வருமான வரி பிடித்தல் போன்ற காரணங்களால் நடுத்தர மக்கள்  வங்கிகளில் முதலீடு செய்வது குறைந்து உள்ளது.  பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தையே வாங்கி முதலீடாக வைத்துக்கொள்கின்றனர்.
அரசு வங்கியில் சேமிக்கப்படும் நிரந்தர வைப்பு தொகையின் வட்டி விகித்தை  அதிகரித்தால், பெரும்பாலானவர்கள் பணத்தை வங்கியில் சேமிக்க முன் வருவார்கள். இதனால் தங்கம் விற்பனை சரிவு ஏற்படும், விலையும் குறைந்து வரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால்,  உலக அளவில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதிவரை இதே நிலை நீடிக்கும் என தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article