சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 488 ரூபாய் உயர்ந்து சவரன்  28,848 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் 29ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 28,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு  உச்சத்தைத் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு  ஜனவரி முதல்  தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது.  பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த மாதம் (ஆகஸ்டு)  27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்து உயர்ந்து 30ஆயிரத்தை எட்டியது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இடையில் சில நாட்கள் விலை குறைந்து வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறத.

சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு 28,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 488  ரூபாய் அதிகரித்திருக்கிறது.