தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ. 8500ஐ எட்டும் என்று கடந்த இறுதினங்களுக்கு முன் ஆருடம் சொல்லப்பட்டது.
இந்த ஆருடங்கள் எல்லாம் பொய்க்கும் வகையில் தங்கம் விலை இன்று ரூ. 8060ஐ எட்டியுள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 7980வாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 64,480க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் தாறுமாறாக உயர்ந்து சாமானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேவேளையில் பணப்புழக்கமும் சரிந்து வருவதை அடுத்து வங்கிகளும் நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ளது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.