சென்னை: அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக அமைச்சர் பெரிய சாமி, கடந்த ஆட்சியை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார்.
தமிழகஅரசு, கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியுள்ள ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு 5 சரவன் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும், கோடிக்கணக்கான ரூபாய் போலி நகைகள் மற்றும் ஆவணங்கள் மூலம் திருடப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவுத்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கவரிங் நகைகளுக்கும் கடந்த ஆட்சியில் (அதிமுக) கடன் வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றால் 80 ஆயிரம் வழங்கி உள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கு கூட ரூ.3 இலட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர் என்று கூறியவர், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
“ முறைகேடுகள், விதிமீறல்களில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை அரசு எடுக்கும். பலருக்கு நகை இல்லாமல் கடன் வழங்கபட்டு உள்ளது, மேலும் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளுக்கு 500க்கணக்கான கடன்கள் வழங்கபட்டுள்ளது. நிறைய விதிமீறல்கள் நடைபெற்று உள்ளது. இவையெல்லாம் சங்கங்களில் வங்கிகளில் ஆய்வு செய்யபட்டு உரிய கிரிமினல் நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.