ஆசிரியரை நியமித்து தெலுங்கு மொழி பயிலும் ’’சீதா பிராட்டி..’’
எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்.படத்தை முடித்துள்ள பிரபாஸ், அடுத்து ’’ஆதி புருஷ’’ என்ற படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
புராண காவியமான ராமாயணக்கதையை, தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் ராமபிரானாக பிரபாஸ் நடிக்கிறார்.
சீதா பிராட்டியாக இந்தி நடிகை கிரிதி சனொன் நடிக்கிறார்.
சயீப் அலி கான், ராவணனாக நடிக்கிறார்.
கிரிதி சனொன் ஏற்கனவே மகேஷ்பாபு ஜோடியாகத் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
ஆதிபுருஷ், ’’பான் இந்தியா’’ படம் என்பதால்,தனது வேடம் பேசப்படும் இருக்க வேண்டும் என்பதால், தனி ஆசிரியரை வைத்து தெலுங்கு கற்று வருகிறார்.
ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.
முதலில் தெலுங்கு டயலாக்குடன் ஷுட்டிங் நடக்கும்.
பின்னர், இந்தி டயலாக்குடன் ஷுட்டிங்.
மும்பையில் இந்த படத்துக்காகப் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரு மொழிகளில் ஷுட்டிங் நடந்தாலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ’டப் செய்து வெளியிடப்படும்.
-பா.பாரதி.