கோவாவில் 174 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

Must read

பனாஜி: கோவாவில் 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 24 மணி நேரத்தில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் கோவாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,027 ஆக அதிகரித்து இருக்கிறது. இன்று 88 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,449 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 1,552 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் 2,837 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தமாக 1,11,296 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article