பொது இடங்களில் மது அருந்தத் தடை : கோவா முதல்வர் அறிவிப்பு

Must read

கோவா

கோவா மாநிலத்தில் பொது இடங்களில் மது அருந்தத் தடை விதிக்கும் சட்டம் விரைவில் அமுலாக்கப்படும் என கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்

கோவா மாநிலத்தில் பொது இடங்களில் மது அருந்துவதும்,  காலி புட்டிகளையும் கேன்களையும் தெருவில் வீசி எறிவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   அத்துடன் பொது இடங்களில் மது அருந்துவதால் மக்களுக்கு பலவகை இடையூறுகள் உண்டாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தாம் கலந்துக் கொண்ட தூய்மை இந்தியா திட்டத்தில் பேசுகையில், “அரசு குப்பை கூளங்கள் கண்ட இடங்களில் வீசுவதை தடுக்க சட்டம் கொண்டு வர உள்ளது.   தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அமுல்படுத்த உள்ளது.   விரைவில் பொது இடங்களில் மது அருந்த தடை சட்டம்  இயற்ற உள்ளோம்.  மீறுவோருக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப் படும்.

இந்த மாதம் இறுதியில் நடை பெற உள்ள மாநில நிதிநிலை அறிக்கை சட்டசபைக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டம் இயற்றப்பட உத்தேசித்துள்ளோம்.   இதன் மூலம் குப்பை கூளம் அதிகம் சேருவது கட்டுப்படும்.   அத்துடன் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் வெகுவாகக் குறையும்.    அத்துடன் இந்த காலி மது பாட்டில்களை போட தனி இடம் உருவாக்கப் பட உள்ளது.”  என தெரிவித்தார்.

More articles

Latest article