“நீ நரகத்துக்குத்தான் போவே!”: அமெரிக்க அதிபரை வசைபாடிய பிலிப்பைன்ஸ் அதிபர்

Must read

மணிலா :
ங்கள் நாட்டுக்குத்  தேவையான ஆயுதங்களை தர மறுக்கும்  அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்திற்கு தான் போவார் என்று  பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி சாபமிட்டுள்ளார்.
அமெரிக்காவும் பிலிப்பைன்ஸூம் நெருங்கிய நட்புநாடுகள். பிலிப்பைன்சில் அமெரிக்காவின் ராணுவ தளமும் உள்ளது. அந்த ராணுவ தளத்தைவிட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனாலோ என்னவோ சமீப காலமாக, இரு நாடுகளுக்கிடையே உறவு அப்படி சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பிறகு பிலிப்பைன்ஸூக்கு அளித்துவந்த ஆயுத உதவி படிப்படியாக குறைக்கப்பட்டுவிட்டது.

ஒபாமா -  டுடெர்டி
ஒபாமா – டுடெர்டி

இந்த நிலையில்பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பேசிய அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி, “எங்கள் நாட்டுக்கு தேவையான  சில ஆயுதங்களை அமெரிக்கா தர மறுக்கிறது. ஆனால் இதுபற்றி கவலைப்படப்போவதில்லை. ஆயுதங்களை விற்க அமெரிக்கா மட்டும் தான் இருக்கிறதா?.  அந்நாடு  தரவில்லை என்றால் ரஷ்யா, சீனாவிடம்  ஆயுதம் வாங்குவோம்.
ஆயுத தேவை குறித்து எங்கள் பிரதிநிதி ரஷ்யாவிடம் பேசிய பொழுது, கவலையே வேண்டாம்… உங்களுக்கு என்னென்ன ஆயுதங்கள் தேவையோ நாங்கள் தருகிறோம்” என்று கூறிவிட்டது.  சீனாவும், “ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டால் போதும் உங்களுக்கு தேவையான ஆயுதங்களை தர தாயாராக இருக்கிறோம் என கூறியுள்ளது”  என தெரிவித்தார்.
மேலும் அவர், “பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில்  கடந்த 3 மாதங்களில் 3,400 அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
அதோடு, “எங்கள் நாட்டுக்கு ஆயுதம் வழங்காத அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்திற்கு தான் செல்வார்” என்றும் குழாயடி சண்டை பாணியில் கடுமையாக விமர்சித்தார்.
ஒரு நாட்டின் அதிபர், இன்னொரு நாட்டின் அதிபரை இப்படி கடுமையாக விமர்சித்துள்ளது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article