அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த தினம் 

vallalar-jpj
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்புருக பாடிய வள்ளலார் பிறந்த தினம் இன்று
இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823)
சத்திய ஞான சபையமைத்து ஆயிரக்கணக்கானோர் பசியை போக்கிய இராம லிங்க அடிகளார் பிறந்த தினம்
கொடையுள்ளத்தால் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் ஓரு ஆன்மிகவாதி. இவர் சைவ சமயத்தை சீர்திருத்தி, புதிய சிந்தனைகளை புகுத்தினார். இவர் இன்றளவும் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில் 1823ல் பிறந்தார். இவரது பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று பொது தருமசாலை ஒன்றை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.
இன்றளவும் இயங்கி வரும் இந்த தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தவிற, இன்றளவும் உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான தர்மசாலைகள் அமைத்து மக்களுக்கு பசியாற்றி வருகின்றனர்.
தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த வள்ளலார், நவீன சமுதாயங்களில் எழும் பிரச்சினைகளை நன்கு உணர்ந்திருந்தார். இவற்றில் பல அன்றைய காலத்தில் இருந்த சமய நெரிகள் என்பதை கண்டு, அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.
இதற்காக சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். வள்ளலார் தம் ஆண்மீக கொள்கைகளை பரப்ப தமிழை பயன்படுத்தினார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் தமிழ் எழுத்தாளராவார். இவர் பல ஆண்மீக பாடல்கள் மற்றும் உரைநடைகளையும் இயற்றியுள்ளார்.
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள், திருவருட்பா வாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள இது, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.
 வள்ளலாரின் கொள்கைகள்:
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.  புலால் உணவு உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.  எதிலும் பொது நோக்கம் வேண்டும். பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. மத வெறி கூடாது.
·         அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் உலகெங்கிலும் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.
·         வள்ளலாரின் திருவருட்பாவிற்கு எதிராகவும் அவரது கொள்கைகளுக்கு எதிராகவும் பல கண்டனங்கள் அந்த காலகட்டத்தில் எழுந்தன. இவர் சைவ சமயத்தை முழுவது மாற்றுவதாக என்னி இவரது திருவருட்பாவிற்கு எதிராக, பல கண்டன நூல்களும் வெளியாகின.
வரலாற்று நிகழ்வுகள்
·         1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
·         1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.
·         1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்டது.
·         1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
·         1799 – ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
·         1864 – இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. 60,000 பேர் கொல்லப்பட்டனர்.
·         1886 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தென்னாபிரிக்காவின் ஜோகானஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது.
·         1903 – சாமுவேல் கிரிஃபித் ஆஸ்திரேலியாவின் முதலாவது தலமை நீதிபதியாக நியமனம் பெற்றார்.
·         1905 – வில்பர் ரைட் முதன் முதலில் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார்.
·         1910 – போர்த்துக்கலில் அரசாட்சி முடிவுக்கு வந்து குடியரசு நாடாகியது. 1944 – பிரான்சில் பெண்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.
·         1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டாதில் 110,000 பேர் கொல்லப்பட்டனர்.
·         1962 – முதலாவது ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான டாக்டர் நோ ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது.
·         1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
·         1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமடைந்தனர்.
·         1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய சிறப்பு தினம்
·         உலக ஆசிரியர் தினம்
·         உலக விபச்சார எதிர்ப்பு தினம்
·         ஆயுதமேந்திய படையினர் தினம் (Armed Forces Day) (இந்தோனேஷியா)
·         அரசியலமைப்பு தினம் (வனுவாட்டு)
·         மூன்று உலக தெளிவான ஒன்று (ரோம பேரரசு)
·         குடியரசு தின (போர்ச்சுக்கல்)
·         ஆசிரியர் தினம் (பாக்கிஸ்தான்)