இந்தியர்களுக்கு இனி பிரிட்டனில் வேலை கிடைப்பது கடினம்?

Must read

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிய கையோடு பிரிட்டனில் பிறநாட்டவருக்கு வேலை தருவதை குறைத்து பிரிட்டன் குடிமக்களுக்கு வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று பிரிட்டன் உள்துறை அதிகாரி அம்பெர் ருட் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியர்களுக்கு பிரிட்டனில் வேலைகிடைப்பது இனி குறையும் என்று அஞ்சப்படுகிறது.

vis

வெளிநாட்டினரை பணியமர்த்துவது தொடர்பாக பிரிட்டன் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
வேலைகிடைப்பது மட்டுமன்றி விசா முடிந்தும் அங்கு தங்கியிருப்போரை வெளியேற்றவும் அந்நாடு தீவிரம் காட்டி வருகிறது. சட்டவிரோதமாக தங்கியிருப்போரை குடியமர்த்துவது கிரிமினல் குற்றம் என்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article