வாரணாசி:
ஞானவாபி மசூதி வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் இருந்த ஹிந்து கோவிலை இடித்து, முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின்போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது. ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துஉள்ளது. இந்த அம்மனுக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, இந்து மதத்தை சேர்ந்த 5 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்
வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஞானவாபி மசூதியில் இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாக கூறி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel