குறைபாடுகளை சுட்டிக் காட்டிய இந்தியர் மீது பணி நீக்க நடவடிக்கை : ஜெனரல் மோட்டார்ஸ்

Must read

ர்ஜினியா

ர்வதேச நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தனது வோக்ஸ்வாகன் வாகனத்தின் டீசல் புகை தடுப்பு குறித்த குறைபாடுகளை சுட்டிக் காட்டியதற்காக தனது இந்திய பொறியாளரை பணி நீக்கம் செய்துள்ளது.

சர்வதேச நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வோக்ஸ்வாகன் கார்கள் உலகப் புகழ் வாய்ந்தவை பல வெளிநாடுகளில் இந்த கார் வைத்திருப்பதை பல செல்வந்தர்கள் தங்கள் அந்தஸ்தின் குறியீடு என நினைத்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஒரு பராமரிப்பு நிலையம் அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் அமைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இந்த கிளையின் மேற்பார்வையாளராக ஹேமந்த் கப்பன்னா என்னும் இந்தியர் பணி புரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தின் கார்களில் 2013 ஆம் வருட தயாரிப்புக்கள் அடிக்கடி டீசல் புகை வெளியீட்டில் பழுதடைந்து வந்தன. இதை பரிசோதித்த ஹேமந்த் இது தயாரிப்புக் கோளாறு என கண்டு பிடித்து தெரிவித்தார். இந்த விவரம் வாடிக்கையாளர்களிடையே பரவியது.

இதனால் பலர் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவே அந்த வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் $33 பில்லியன் அபராதம் அளிக்க நேரிட்டது. இந்திய மதிப்பில் இது ரூ23.77 லட்சம் கோடி ஆகும். இதனால் ஹேமந்த் கப்பன்னாவை பணி நிக்கம் செய்துள்ள நிறுவனம் அவருக்கு இழப்பீடாக இரு மாத ஊதியமும் இந்தியா செல்ல விமான டிக்கட்டும் அளித்துள்ளது.

ஹேமந்த் கம்மன்னா இந்தியாவை சேர்ந்தவர் எனினும் கடந்த 17 வருடங்களாக அமெரிக்காவில் கல்வி கற்று அங்கேயே பணிபுரிபவர் ஆவார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பணி புரிந்து வருகிறார். அவர் இந்த கார் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவில் தற்போது பணி ஆற்றி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article