தேவையான பொருள்கள்;

புளி – 100 கிராம்  இரவு ஊறவைத்தது
தண்ணீர் – 400 மி.லி  குளிர்ந்த நீர்
வெல்லம் – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
சுக்குப்பொடி – சிறிதளவு
மிளகுத்தூள் – சிறிதளவு

செய்முறை;

முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த புளியுடன் வெல்லம் கலந்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு சேர்த்து குடிக்கலாம். பானகம் செய்யும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் ஆரோக்கியம்.


இதில் இருக்கும் பலன்கள் ரத்தசோகை நீங்கும், பசியைத் தூண்டும், குமட்டல் பிரச்னை போக்கும், ஜீரணத்தை அதிகப்படுத்தும். நாவறட்சியைப் போக்குவதுடன் வெயிலினால் ஏற்படும் உடல் சூட்டையும், களைப்பையும் நீக்கும் தன்மை இந்த பானகத்துக்கு உள்ளது.


இயற்கையான முறையில் குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும். உடல் சோர்வை போக்கும்.
மிளகு மற்றும் சுக்கு தொண்டையில் ஏற்படக்கூடிய கரகரப்பை குணமாக்கும் நல்ல மருந்தாக உள்ளது. வியர்வையினால் ஏற்படக்கூடிய சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் போக்கும் ஒரு சிறந்த பாரம்பரிய பானமாகும்