ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு 16.42 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை 34.04 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது கொரோனா எனும் கொடிய வைரஸ். தற்போது உருமாறிய நிலையில், 2வது அலையாக பரவி உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் 2வது அலையில் சிக்கி பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் அதிகரித்து வருகின்றனர்,. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே வேளையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,42, 67,068 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 142,986,624 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே வேளையில், பெருந்தொற்று தாக்குதலுக்கு இதுவரை 34 லட்சத்து 04 ஆயிரத்து 185 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 17,876,259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 101,708 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா: பாதிப்பு – 33,747,439, உயிரிழப்பு – 600,533, குணமடைந்தோர் – 27,202,309
இந்தியா: பாதிப்பு -25,227,970, உயிரிழப்பு – 278,751, குணமடைந்தோர் – 21,590,003
பிரேசில்: பாதிப்பு – 15,661,106, உயிரிழப்பு – 436,862, குணமடைந்தோர் – 14,152,433
பிரான்ஸ்: பாதிப்பு – 5,881,137, உயிரிழப்பு – 107,812, குணமடைந்தோர் – 5,152,370
துருக்கி: பாதிப்பு – 5,127,548, உயிரிழப்பு – 44,983, குணமடைந்தோர் – 4,961,120