சென்னை:

சீன அதிபர் தமிழகம் வர உள்ள நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீன அதிபர், பிரதமர் மோடி இடையே மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்கான மத்திய மாநில அரசுகள் வரவேற்பு, கலைநிகழ்ச்சிகள், பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சீன அதிபரை வரவேற்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகம் வரும் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

வரும், 11, 12 ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக தெரிவித்த எடப்பாடி,   சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து  பேசியவர்,  பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சீனாவிற்கும் தமிழகத்திற்கும் வணிக ரீதியிலான தொடர்பு இருந்துள்ளது சீனப் பயணியான யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்து சென்றுள்ளார் என்றும் கூறினார்.