சென்னை: அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.   மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என கூறினார். எந்தவித தயக்கமின்றி அறிவியலின் கொடையான தடுப்பூசியை போட்டுக்கொள்வோம் என கூறினார்.

மார்ச் 16ந்தேதி தேசிய தடுப்பூசி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதனால், அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கதிதல்,  “இன்று தேசிய தடுப்பூசிதினம். மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் பிடியிலிருந்து நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ள, எவ்வித தயக்கமும் இன்றி, அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக் கொள்வோம். தவறாமல் முகக்கவசமும் அணிவோம்!… கொரோனாவை வெல்வோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ந்தேதி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.