வாஷிங்டன்: கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், அமெரிக்க காவல்துறை அதிகாரிக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி  அன்று அமெரிக்காவில், ஜார்ஜ் பிளாய்ட் (வயது 48) என்ற கறுப்பினத்தவர், கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட கைகலப்பை அடுத்து, அவரை கீழே தள்ளிய காவல்துறை அதிகாரி டெரெக் சாவின்  பிளாய்ட் கழுத்தில்  முழங்காலை வைத்து அழுத்தினார். இதனால் மூச்சுவிட முடியவில்லை என்று பிளாய்ட் கெஞ்சியும் அதிகாரி கண்டுகொள்ளாமல் தனது பிடியை மேலும் இறுக்கினார். இதனால், ஜார்4 பிளாய்ட் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வமலகளை ஏற்படுத்தியது. இனவெறி காரணமாக பிளாய்ட் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படது. இது தொடர்பாக பிளாய்ட் குடும்பத்தினர் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் உட்பட நான்கு பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கு அமெரிக்க மினசோட்டா மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வதுக்கின் விசாரணை முடிவடைந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

வழக்கை விசாரித்த மினசோட்டா நீதிபதி பீட்டர் காஹில், ”ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலைக்காக காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22.5  ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். ”இந்த தண்டனை உணர்ச்சி அல்லது பொதுக்கருத்தின் அடிப்படையில் அல்ல என்று கூறியதுடன்,  அதிகார துஷ்பிரயோகம்,  பிளாய்டை கொடுமையுடனும், மரியாதை இல்லாமலும் நடத்தினார், மேலும் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்க வேண்டிய கண்ணியத்தை அவருக்கு கொடுக்க மறுத்தார், அமெரிக்க காவல்துறையில் சீர்திருத்தம் செய்யவேண்டிய தரும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெரெக் சாவின் உடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற 3 பேர்மீதான விசாரணை அடுத்த மார்ச் மாதம் மினசோட்டா மாநில குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.