சென்னை: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த சொத்து அபகரிக்கப்பட்ட புகாரில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஜக நிர்வாகியும், பில்டருமான அழகப்பன்மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கமல் உள்பட பல நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கவுதமி. இவர் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் பல ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசனின் தாலி கட்டாத மனைவியாக வாழ்ந்த வந்தார். பின்னர் கமலிடம் இருந்த பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தற்போது கவுதமி சென்னையில் தனது மகள் சுப்புலட்சுமியுடன் வசித்து வருகிறார்.
இவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளார். அதனப்டி, தனக்கு சொந்தமான 46 ஏக்கர் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளார். அதற்காக பாஜக நிர்வாகியான அழக்கப்பன் மூலம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அழகப்பன் கவுதமியை ஏமாற்றியதாக தெரிகிறது. இதுதொர்பாக நடிகை கவுதமி காவல்துறையில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் அளித்தார்.
தனது 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக அழகப்பன், அவரது மனைவி மீது கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பரில் புகார் அளித்தார். அவரது புகார் மனுவில், அழகப்பன் என்ற பில்டர் மற்றும் அவரது மனைவி தன்னை அணுகி, சொத்துக்களை விற்பனை செய்வதாக உறுதியளித்ததாகவும், இப்போது போலி ஆவணங்களை உருவாக்கி தன்னை ஏமாற்றியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மற்றொரு புகாரில், கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கும் தனது மகளுக்கும் கொலை மிரட்டல் வந்ததையடுத்து, பில்டர் அழகப்பன் , அரசியல் குண்டர்களின் உதவியுடன் தனக்கும் தனது மகளின் உயிருக்கும் இடையூறு விளைவிப்பதாக நடிகை புகார் பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தனது மகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சென்னை காவல்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது சொத்துக்களை சட்டப்பூர்வமாக மீட்க உதவுமாறும் புகார் மனுவில் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், தான் பில்டர் அழகப்பனால், ஏமாற்றப்பட்டது தொடர்பாக பாஜக தலைமையிடமும் கவுதமி கூறிய நிலையில், பாஜக தலைமை, அவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட மறுத்து விட்டது. இதனால், அவர் இன்று திடீரென பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார். கவுதமி ஏற்கனவே கொடுத்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளது. பாஜகஎ நிர்வாகி அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
பாஜகவில் இருந்து விலகிய நிலையில், காவல்துறை உடனே வழக்குகளை பதிவு செய்துள்ளது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
வேதனை மற்றும் ஏமாற்றத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன்! நடிகை கவுதமி பரபரப்பு அறிக்கை…