பெங்களுரூ:

கர்நாடகா பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது 55) 2017ம் ஆண்டு செப்டம்பரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாண்டியாவின் மதூர் பகுதியில் ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் ஹிந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த நவீன் குமார் (வயது 37) என்பதும், கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கவுரி லங்கேஷ கொலை வழக்கில் நவீன் குமாரை எஸ்ஐடி போலீசார் கைது செய்து பெங்களூரு தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

[youtube-feed feed=1]