கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான யாஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக மிரட்ட ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்த படம் கே ஜி எஃப்.

ராமச்சந்திர ராஜு கே ஜி எஃப் திரைப்படத்தில் கருடா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தியிருந்தார். கே ஜி எஃப் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு இவரை கருடா ராம் என மாற்றியது . அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த சுல்தான் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் மஹா சமுத்திரம் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். நடிகர் சித்தார்த் மற்றும் நடிகர் சர்வானந்த் நடிக்கும் இந்த படத்தில் அனு இமானுவேல் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இயக்குனர் அஜய் பூபதி இயக்கும் இந்த படத்தை AK என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளர் ராஜ் தோட்டா ஒளிப்பதிவு செய்ய சைட்டன் பரத்வாஜ் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் கருடா ராம் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் போஸ்டர் இன்று வெளியானது.