சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிறது தனுஷின் D43 .

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

முதல் நாள் ஷூட்டிங்கில் பாடல் காட்சியை படமாக்கினர் படக்குழுவினர். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்ற ருசிகர தகவலையும் பகிர்ந்திருந்தார் ஜிவி பிரகாஷ்.

இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கிறார் .

மேலும் Youtube பிரபலம் பிரசாந்த் படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுடன் நடித்த காட்சிகள் பற்றியும், D43 திரை அனுபவம் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ‘D43’ படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘D43′ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என்றும் இந்த படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பு என்றும் தெரிவித்து உள்ளது. எனவே தனுஷ் சென்னை திரும்பிய உடன் ‘D43’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.