ஆர்.கே.நகரில் பாஜ சார்பில் கங்கை அமரன் போட்டி

சென்னை;

ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜ சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகருக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சசி அணி சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் மருத கணேஷ், அதிமுக பன்னீர் அணி சார்பில் மதுசூதனன், தீபா பேரவை சார்பில் தீபா, தேமுதிக சார்பில் மதிவாணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என் அறிவித்துவிட்டன. இந்நிலையில் பாஜ சார்பில் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜ தேர்தல் குழு செயலாளர் ஜேபி நட்டா இன்று இதை அறிவித்துள்ளார்.

கங்கை அமரன் கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜ.வில் இணைந்தார். சமீபத்தில் இவர் சசிகலா தரப்பு மீது சொத்து அபகரிப்ப குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆர்.கே.நகரில் இவர் போட்டியிட விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து பாஜ இவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.


English Summary
gangai amaran candidate for bjp in rk nagar bye election