மதுரை,

த்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று ஆசைப்படு கிறார் தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

நேற்று மதுரையில் பா.ஜ.கவின் மாவட்ட நிர்வாகிள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பாஜவினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்று தமிழிசை கூறினார். மேலும் திமுகவின் வேட்பாளரை அக்கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் அரசை குறை கூறினார்.

மேலும், உ.பி.போல தமிழகத்திலும் பாரதியஜனதா ஆட்சியை பிடிக்கும் என்றும் அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும்  தமிழிசை கூறினார்.