சென்னை:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், கூட்டமாகக் கூடுவதற்கும் காவல்துறை தடைசெய்துள்ளது.
இதுகுறித்து பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு வரும் 15.9.2021 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
நமது அண்டை மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்களில் கொண்டாட்டங்களுக்காக மக்கள் அதிகளவு கூடியதால், தற்போது அங்கு கொரோனா தொற்று அதிகளவு பாதித்துள்ளதால். கொரோனா ‘தொற்று பரவலைத் தடுக்க பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்பேரில், தமிழகத்தில் சமய விழாக்களை முன்னிட்டு. மதச்சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது கடங்களில். உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
இதன் தொடர்ச்சியாக, நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து, சென்னை பெருநகரில் சென்னை பெருநகர காவல்துறை சார்பாகப் பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
1. கொரோனா பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுதல் மற்றும் பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதே போல விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், கூட்டமாகச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
ஆகவே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனி நபர்கள் தங்களது இல்லங்களிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபர்களாகச் சென்று: அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
2. சென்னையைப் பொறுத்தவரை, கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.
மேற்குறிப்பிட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தட செய்யப்படுகிறது.
தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைத் தணி நபராக எடுத்துச் சென்று அருகிலுள்ள ஆலயங்களில் வைத்துச் செல்லலாம். இங்கு வைக்கப்படும் சிலைகளை முறையாகக் கரைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்கண்ட அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்கள் வாங்கக் கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப் பிடித்தும், திரவ சுத்திகரிப்பான் மூலம் அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தும், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து பொருட்கள் வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை பெருநகர் முழுவதும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாகக் கண் காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை எவ்வயிலேனும் மீறிச் செயல்படுபவர்கள் மீது வல்துறை சட்டப் பூர்வமான நடவடிக்க எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கூறிய அறிவுரைகளைப் பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடித்து, சென்னை பெருநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.